
சிவசக்திவேல் (சிசவே)
ஆன்மா மகிழ்வடையும் சங்கதிகளைக் கட்டுதலே ஆன்ம தேடலின் ஆரம்பம். அதுவே உங்களது ஆன்ம நதி ஆன்ம சாகரத்தை சென்றடையும் முயற்சி.
ஆன்மா மகிழ்வடையும் சங்கதிகளைக் கட்டுதலே ஆன்ம தேடலின் ஆரம்பம். அதுவே உங்களது ஆன்ம நதி ஆன்ம சாகரத்தை சென்றடையும் முயற்சி.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பிறந்தவர். இவரது பெற்றோர் தனலட்சுமி (ஆசிரியை) ராஜீ (காவல்துறை ஆய்வாளர்) ஆவர். பள்ளி இறுதி வகுப்பு வரை பாப்பாரப்பட்டியில் பயின்றவர். கோவை அரசினர் தொழிற் நுட்பக் கல்லுரியில் பொறியியற் பட்டப்படிப்பை முடித்துக் கணினித் துறையில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர். பணி நிமித்தமாகப் பல்வேறு அயல் நாடுகளுக்கும் சென்று வந்தவர். இவருக்குச் சிறுவயதிலிருந்தே இலக்கிய ஈடுபாடுத் தன் முதல் தமிழ் ஆசிரியை மற்றும் கவிஞரான தனது தாய் லட்சுமி ராஜு வழியாக வந்தது.
இவர் தமிழ்ப் படைப்புலகின் பிதாமகர்கள் புதுமைப்பித்தன், லா.ச.ரா, கி.ரா, கு.ப.ரா, தி.ஜானகிராமன், கல்கி, சுந்தர ராமசாமி, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், போன்றவர்களின் எழுத்து ஆளுமைகளால் ஈர்க்கப்பட்டுத் தமிழ் இலக்கியத்தின் மீது தன் நாட்டத்தைத் திருப்பியவர். 2024 ஆண்டிற்கான எழுத்து வேந்தர் ‘தகடூரான் விருது’ பெற்றவர். 2023 ஆண்டில் தருமபுரி மாவட்டச் சிறந்த சிறுகதைக்கான தேர்வில் பரிசைப் பெற்றவர். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஒரு குறுநாவல், ஒரு கதை கவிதை கட்டுரை திரட்டு (முத்திரட்டு) மற்றும் ஒரு வரலாற்றுப் புதினம் (வலைப்பதிவாக வெளிவந்தது இன்னும் அச்சில் ஏறவில்லை) இவற்றை படைத்துள்ளார்.
ஆசிரியரின் நூல்கள்:
சிறுகதைகள்:
தோணி (2023)
நெடுஞ்சாலை இரவு (2023)
ஆசானே, என்னை மன்னிப்பீராக! (2025)
குறுநாவல்: ஆங்கிலம்(2024)
கதை கவிதை கட்டுரை திரட்டு: முத்திரட்டு(2025)
சிறுகதை தொகுப்பு மற்றும் குறுநாவல்
கதை கவிதை கட்டுரை விலை Rs. 180
இதற்கு முன் இந்த மாதிரியான, கலவையான ஒரு தொகுப்புப் புத்தகம் வெளி வந்திருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. அல்லது அத்தகையதொரு புத்தகத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு இந்தப் புத்தகம் வெளிவரும் வரையிலும் கூடக் கிடைக்கவில்லை. இதுநாள் வரை நான் கிறுக்கிய எல்லாக் கிறுக்கல்களையும் ஒன்று சேர்த்து ஒரு புத்தகமாக வெளிவிட வேண்டும் என்ற ஒரு கிறுக்குத்தனமான ஆசை ஒருநாள் என்னுள் துளிர் விட்டது. நான் எழுத்துத் துறைக்கு வந்த தொடக்கம் முதல் வலைத்தளங்களிலும் முகநூல்களிலும் மற்றும் பல்
மூன்று சிறுகதை தொகுப்புகள் ஒரு கதை கவிதை கட்டுரை தொகுப்பு மற்றும் ஒரு குறுநாவல்
மூன்று சிறுகதை தொகுப்புகள் மற்றும் ஒரு குறுநாவல் முழுவதும்.
ஆசானே, என்னை மன்னிப்பீராக ! (சிறுகதைகள்)
முத்திரட்டு (கதை கவிதை கட்டுரை
முத்திரட்டு நூல் நான் எழுத்துத் துறைக்கு வந்த தொடக்கம் முதல் வலைத்தளங்களிலும் முகநூல்களிலும் மற்றும் பல்வேறு வாட்சாப் குழுக்களிலும் எழுதிய, ஆனால் இதுவரை வெளிவராத என்னுடைய கதை, கட்டுரை, கவிதை இவற்றின் திரண்டத் தொகுப்புத் தான் இந்தப் புத்தகம்.
Get advanced teaser copy from new releases!
Copyright © 2024 - 2025 Writer Sivasakthivel - All Rights Reserved.
Copyright related: Articles published in this website can be shared freely on the Internet. But in order to publish the articles on any other medium and formats prior permission required from author. © 2024 - 2025 காப்புரிமை எழுத்தாளர் சிவசக்திவேல். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.